19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்

Monday, 20 April 2015 - 20:29

19%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல் முறையை  மாற்றும் 20வது அரசியல் அமைப்பு ஆகியவற்றை ஒரே தடவையில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது, எதிர் கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இதனை கடுமையாக வலியுறுத்தியதாக ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தைகளில் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

19வது திருத்தச் சட்டத்தை இந்த தருணத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் பல சிக்கல்கள் ஏற்படலாம் என விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய 19வது திருத்தச்சட்டத்தில் புதிய திருத்தம் ஒன்றை கட்சி தலைவர்களுக்கு பிரதமர் கிடைக்க கூடியதாக செய்ததாக லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளர் திஸ்ச வித்தாரண தெரிவித்தார்.

இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேராவிடம் இது தொடர்பில் வினவியபோது, 19 மற்றும் 20ஆம் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் இரண்டும் ஒன்றாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நேற்று கூடிய கட்சியின் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும் 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்காதவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை அரசியல் சரித்திரத்தில் குப்பை தொட்டிக்குள் வீசப்படுவார்கள் என சபை முதலர்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.