Update: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்

Saturday, 23 May 2015 - 10:36

+Update%3A+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, யாழ்ப்பாணம் கொக்குவில்லில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கொக்குவில் கலை இலக்கிய பேரவை அலுவலகத்துக்குள் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடையுத்தரவை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் நகரசபைக்கு உட்படாத பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாதர் சங்க உறுப்பினர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தார்.

இந்தநிலையி;ல், 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த 21 மற்றும் 24 வயது மதிக்கதக்க இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவன் பொகவந்தலாவ குயினா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்த இளைஞர்களை அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.



Update: Saturday, 23 May 2015 - 19:58
........................................................................

யாழில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

யாழ்ப்பாண நகரில் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களை நடத்த, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. 

காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், மானிப்பாயில் இயங்கும் குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி இயக்கம் மற்றும் கொக்குவில் - ரஜினி தலைமையிலான பெண்கள் இயக்கம் ஆகியவற்றுக்கு இந்த விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 130 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன் அடிப்படையிலேயே இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை புங்குடு தீவு மாணவியின் படுகொலைக்கு எதிராக சீதுவை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

சீதுவை பெண்கள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாளையதினம் மகளிர்விவகார அமைச்சினால் கொழும்பில் இது குறித்து பேரணி ஒன்று நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புங்குடுதீவு மாணவியின் கொலைக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, திருகோணமலையிலும் பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் திருகோணமலையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

அத்துடன் கிழக்கு மகளிர் அமைப்புகளாலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

இதற்கிடையில் மன்னார் மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகளால், புங்குடுதீவு மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.