மட்டக்களப்பிற்கான 10 ஆயிரம் வேலை வாய்ப்புகள் இழக்க கூடிய நிலை...

Thursday, 28 July 2016 - 12:52

%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+10+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88...+
10 ஆயிரம் வேலை வாய்ப்புகள் பெறக்கூடிய மட்டக்களப்பு, நாயாரில் நிர்மாணிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசிய நீரியல் வள பூங்கா திட்டம், அந்த மாவட்டம் இழக்கு கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த அமைச்சின் செயலாளர் மங்கலிக்காவின் அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த பிரதேசத்தில் அரசியல்வாதிகள் பலர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் சிலவும் இந்த திட்டத்திற்கு எதிராக செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்கம் காரணமாக அந்த திட்டத்தை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்காக அரசாங்கம் முதலிடுவதற்காக எதிர்பார்த்துள்ள நிதி ரூபாய் 4 ஆயிரம் மில்லியன் ஆகும்.

எனினும் தவறான பிரச்சாரம் காரணமாக சில நபர்கள், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் இந்த திட்டத்தை வேறு பிரதேசத்திற்கு மாற்றுமாறு மீன்பிடித்துறை அமைச்சர், செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.