நாட்டை சக்திமயப்படுத்தும் அபிவிருத்தி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்..

Thursday, 28 July 2016 - 13:05

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
எதிர்வரும் சில தினங்களில் நாட்டை சக்திமயப்படுத்தும் வகையிலான ஐந்து வருட பொருளாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு பங்குச் சந்தைக்கு இன்று விஜயம் செய்த அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
 
நாட்டின் பொருளாதாரத்தில் நிலையானத் தன்மையை ஏற்படுத்தாமல் எதனையும் மேற்கொள்ள முடியாது.
 
கடந்த 30 – 40 வருடங்களாக பின்பற்றப்பட்ட பொருளாதார கொள்கைகள் காரணமாக, நாட்டில் நிலையற்றத் தன்மை ஏற்பட்டிருந்தது.
 
ஆனால் தற்போது இந்த அரசாங்கம் அந்த நிலைமையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
இதன்படி மத்திய வங்கியும், அரசாங்கமும் நெருங்கி செயற்பட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.