நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக கூறி நடிகர்-நடிகைகள் திடீர் முற்றுகை போராட்டம்!

Sunday, 28 August 2016 - 10:55

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF++%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
நடிகர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக கூறி துணை நடிகர்-நடிகைகள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

நடிகர் சங்கத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர்.

இவர்கள் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக நட்சத்திர கிரிக்கட் போட்டி நடத்தி நிதி திரட்டினார்கள். அடுத்து நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் புதிய படம் ஒன்றில் நடித்து அதில் கிடைக்கும் சம்பள தொகை முழுவதையும் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

ஓரிரு மாதத்தில் கட்டுமான பணிகளை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் சங்க நிர்வாகிகளை கண்டித்து துணை நடிகர்-நடிகைகள் சிலர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அவர்கள் நேற்று காலை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் நடிகர் சங்க அலுவலகம் முன்னால் திரண்டார்கள். “நடிகர் சங்கமே எங்களுக்கு வேலை கொடு, வேலை கொடு” என்று அவர்கள் கோஷம் போட்டனர். அலுவலகத்துக்குள் நுழையவும் முயன்றார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

நடிகர் சங்க அலுவலகமும் பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிரே இருந்த நடிகர் சங்கத்தின் காலிமனையில் திரண்டார்கள்.

அங்கும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் போட்டபடி இருந்தனர். பொலிசார் அவர்களை வெளியேற்ற முயன்றனர். ஆனாலும் வெளியேற மறுத்து கோஷம் போட்டனர்.

“நடிகர் சங்கத்தினரின் கெடுபிடிகளாலும் ஒருதலை பட்சமான நடவடிக்கைகளாலும் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். சினிமா படப்பிடிப்பு வேலைக்கு அழைக்க மறுக்கிறார்கள். இதனால் கஷ்டப்படுகிறோம். எங்களுக்கு வேலைக்கான உத்தரவாதத்தை ஏற்படுத்தி தரவேண்டும்” என்று அவர்கள் வற்புறுத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் சங்க உறுப்பினர் வாராகி நிருபர்களிடம் கூறும்போது, “நடிகர் சங்க நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இல்லை. நட்சத்திர கிரிக்கட் போட்டி நிதி வசூலில் முறைகேடு நடந்துள்ளது.

கட்டிடம் கட்டும் பணியிலும் டெண்டர் விடாமல் கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர். இதை எதிர்த்து விரைவில் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.” என்றார்.