வத்தளை சம்பவம் - மூன்று பேருக்கு இன்று வரை விளக்கமறியல்..

Tuesday, 30 August 2016 - 8:45

%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D..
வத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக கூச்சலிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வத்தளை நீதவான் முன்னிலையில் நேற்று அவர்கள் முன்னிலை செய்யப்பட்ட போது, இன்று வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்தளை ஒலியமுல்லயில் தமிழ் பாடசாலை ஒன்றுக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் ஜோன் அமரதுங்க உரையாற்றும் போது, சிலரால் கூக்குரல் இடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பிலேயே நேற்று மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.