திருட்டு விசிடிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் !

Wednesday, 28 September 2016 - 17:17

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%21
இளையதளபதி விஜய் ரசிகர்கள் அவ்வப்போது பொதுநல சேவைகள் செய்து வருவதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் புதிய திரைப்படங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்படுவது, திருட்டு விசிடி விற்பனைக்கு எதிராக தற்போது களமிறங்கியுள்ளனர்.
 
குறிப்பாக சமீபத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' மற்றும் விஜய்சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' ஆகிய திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டு விசிடி வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர்மாவட்டம் அனைத்து நகர ஒன்றியம் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல்துறையினர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புகாரில், 'சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் திரு.தனுஷ் அவர்கள் நடித்த தொடரி திரைப்படம் மற்றும் நடிகர் திரு.விஜய்சேதுபதி அவர்கள் நடித்த ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணைய தளத்தில் ஆன்-லைன் மூலம் தரவிறக்கம் செய்து திருட்டு வி.சி.டிக்களாக பதிவு செய்து தமிழகம்,புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்கப்படுகிறது.
 
எங்களது இளைய தளபதி நடிக்காத திரைப்படமாக இப்படங்கள் இருந்த போதிலும் திரையுலகின் முக்கிய பிரச்சினையான இதை பொது நலன் கருதி இப்பிரச்சினை மீது உடனடியாக விசாரணை நடத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு இணையதளம் மூலம் தரவிறக்கம் செய்வதை உரிய தொழில் நுட்பங்களின் உதவியோடு (சைபர் கிரைம்) தடுப்பதோடு திருட்டு வி.சி.டி யாக விற்பனை செய்வதை தடுத்து அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.