ரஷ்யா மீது அமெரிக்க விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Thursday, 29 September 2016 - 8:56

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
அலெப்போ பிராந்தியத்தில் ரஷ்யா குண்டுத் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், சிரியா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகவிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவுக்கும் அவருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்பேது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலெப்போ பிராந்தியத்தில் ரஷ்யா நடத்தும் குண்டுத் தாக்குதல்களால் பல பொது மக்கள் உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்கா இந்த பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.