பால்நிலை சமத்துவம் வேண்டும்.......

Thursday, 29 September 2016 - 9:10

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.......
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பால்நிலை சமத்துவம் குறித்து மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக, சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

ஆனால் அரசியல் தீர்வு மாத்திரம் நிலையான சமாதானத்தையும் சக வாழ்வையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது.

வடக்கிலும் கிழக்கிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமையிலான பல குடும்பங்கள் உள்ளன.

இந்த பகுதிகளில் பெண்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்படும் நிலைக் காணப்படுகிறது.

எனவே அங்கு பால் நிலை சமத்துவத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே சகவாழ்வையும், நிலையான சமாதானத்தையும் உருவாக்க முடியும் என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.