கொலை அச்சுறுத்தல் குறித்து பதிலை எதிர்ப்பார்த்துள்ள விக்னேஸ்வரன்...

Friday, 21 October 2016 - 15:08

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D...
தமக்கு ஏற்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பில் காவற்துறையினரிடம் விசாரணை நடத்த கோரியுள்ள நிலையில், அதற்கான பதிலை எதிர்பார்த்திருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பலபிட்டிய பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒன்றில், தம்மை கொலை செய்வதற்கு ஒருவருக்கு 25 மில்லியன் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த மின்னஞ்சலின் பிரதியை காவற்துறை மா அதிபருக்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அனுப்பி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அதற்கான பதிலை எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பாதுகாப்பு தொடர்பில் வடமாகாண சபையினால் காவற்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

தமக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கூறி இருந்தார்.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு வடமாகாண சபையினால் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும் இந்த கடிதம் தொடர்பில் தமக்கு இன்னும் பதில் வழங்கப்படவில்லை என்று, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.