இரண்டு கடற்தொழிலாளர் குழுக்களுக்கு இடையில் கடுமையான மோதல்!! காணொளி

Friday, 21 October 2016 - 18:53

+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
கல்பிட்டிய குரிஞ்ஞன்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு கடற்தொழிலாளர் குழுக்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்துவதற்கு விசேட காவல்துறை பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று ஏற்பட்ட இந்த மோதல் காரணமாக எட்டு படகுகள் சிறிய ரக பாரவூர்தி ஒன்று மற்றும் உந்துருளிகள் என்பன தீயிட்டுக்கொழுத்தப்பட்டடுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்து ஏழு பேர் கல்பிட்டிய மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்தொழிலாளர்கள் சிலர் நேற்றைய தினம் புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியில் ஆர்பாட்டத்தில் ஈடபட்டனர்.

இதன்போது கல்பிட்டிய உச்சமுனை பிரதேசத்தை சேர்ந்த தடைசெய்யபட்ட வலைகளை பயன்படுத்தும் கடற்தொழிலாளர்கள் தம்மை விரட்டியடித்ததாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

அத்துடன் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபடுவதை தடுக்குமாறு கோரி இரண்டாவது நாளாகவும் ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாக குற்றம்சுமத்தப்படுகின்ற சிலர் ஆர்பாட்டம் நடத்திய கடற்தொழிலாளர்களை எதிர்த்துள்ளனர்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.