வரவு செலவு திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள்..

Friday, 21 October 2016 - 19:47

%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
அடுத்த வரவு செலவு திட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுதிட்ட சட்டமூலம் தொடர்பில் இன்று அரசியல் மேடைகளில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

புதிய வரவு செலவுதிட்டத்தின் மூலம் மக்களுக்கு நிவாரணங்களை பெற்று கொடுக்கும் வகையிலான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் பீ ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணங்களை பெற்று கொடுப்பதன் மூலம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும்.

கடந்த வரவு செலவு திட்டத்தில் கல்வி மற்றம் சுகாதரா அபிவிருத்திக்காக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோன்று இந்த வரவு செலவு திட்டத்தின் மூலமும், கல்வி மற்றும் சுகாதராத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் பீ ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மொத்த தேசிய வருமானத்தில் இருந்து 6 சதவீத நிதியை கல்விக்காக ஒதுக்குவதாக கூறிய அரசாங்கம், கடந்த பாதீட்டில் 185 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருந்தது.

அது இம்முறை 98 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்கு தெரிவித்தார்.

அத்துடன் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்குவதற்கான வரவு செலவு திட்டம் ஒன்றையே அரசாங்கம் தயாரித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, சுகாதாரம் மற்றும் கல்விதுறை அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் அரசாங்கம் வெளிநாடுகளை பார்வையிடுவதற்கான வேலைதிட்டத்தையே முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தை சேர்ந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரை மக்கள் ஆட்சியில் இருந்து கவிழ்துள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் வௌவேறு பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக ஊடகதுறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.