மத்திய வங்கியின் முறி கோப் குழு கூடுகிறது....

Wednesday, 26 October 2016 - 12:53

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81....
மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் தொடர்பில் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவான கோப் குழு இன்றும் கூடவுள்ளது.

பிற்பகல் 2.30க்கு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவர் சுனில் ஹந்துநெத்தி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக ஜே வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினரும், கோப் குழுவின் உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமையும் கோப் குழுவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் வழங்கிய அழுத்தம் காரணமாக அதன் தலைவர் சுனில் ஹந்துநெத்தி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கோப் குழுவுக்கான தற்காலிகத் தலைவர் ஒருவரை நியமித்து, பரிந்துரைகளை முன்வைத்தனர்.

இதன்போது அர்ஜுன் அலேசியஸ் உள்ளிட்ட பெர்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றையதினம் இடம்பெறும் கூட்டத்தில் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள இறுதி அறிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.