மகிந்த தரப்பு இனவாதம்

Wednesday, 26 October 2016 - 15:55

+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் நேற்று ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
 
மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தன இந்த கேள்வியை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
 
போராட்டம் நடத்திய குழு ஒன்றினால் காவற்துறையினர் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், இது குறித்து அரசாங்கம் அறிந்துள்ளதா? என்ற கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, சம்பவம் தொடர்பில் இன்று காலை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டார்.
 
இந்த நிலையில் காவற்துறையினர் தங்களின் கடமைகளை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதா? என்று தினேஸ்குணவர்தன கேள்வி எழுப்பினார்.
 
இதன்போது கருத்துரைத்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, அரசாங்கம் அதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக கூறினார்.
 
மேலும் மகிந்த தரப்பினர் அனைத்து விடயங்களையும் இனவாதமாகவே எடுத்துக் கொள்வதாகவும், தெற்கிலும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.