போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஸ்மித் செய்த காரியத்தை பாருங்கள்!! நம்ப முடியாத செயல் - காணொளி...

Sunday, 04 December 2016 - 17:57

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF...
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இந்த போட்டி இன்று நடைபெற்றது.

நாணய சுழட்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றது.

அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 164 ஓட்டங்களைப் பெற்றார்.

இதையடுத்து, 325 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 44.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 256 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்விடையந்தது.

நியூஸிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மார்டின் குப்டில் 114 ஓட்டங்களை பெற்றார்.

அவுஸ்திரேலிய அணியின் ஜோஸ் ஹேஷல்வுட் 3 விக்கட்டுக்களையும், மிட்ஷல் மார்ஷ் , பட் கமின்ஸ் மற்றும் எடம் ஷம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியினூடாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஸ்மித்தின் இந்த பிடி எடுப்பும் வெற்றிக்கு ஓர் முக்கிய காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்மித்தின் சிறந்த பிடி எடுப்பு காணொளி இணைப்பு...