நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..

Monday, 05 December 2016 - 10:11

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88..
மத்திய, மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அவதான மையத்தின் அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்கு திசையில் பொத்துவில் பகுதியிலிருந்து சுமார் ஆயிரத்து 300 கடல்மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை அவதான மையம் குறிப்பிட்டுள்ளது.