ஜெயலலிதாவுக்கு சத்திர சிகிச்சை..

Monday, 05 December 2016 - 13:09

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88..
சிகிச்சைக்கு மத்தியில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று காலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் ஜெயலலிதா சுகமாக வீடு திரும்புவார் என்று அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பேச்சாளர் சி.ஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

எனினும் சத்திரசிகிச்சை தொடர்பில் அப்பலோ மருத்துவமனை இன்னும் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கான சிகிச்சைககள் அளிக்கப்பட்டு வந்தநிலையிலேயே நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஜெயலலிதா, அதிதீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.இந்தநிலையில் சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜெயலலிதா சிகிச்சைப்பெற்றுவரும் மருத்துவமனையின் வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஜெயலலிதா சுகம்பெற வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுபுறத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப்பிரச்சினை ஏற்படவில்லை என்று தமிழக பொறுப்புக்கூறல் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டசபை உறுப்பினர் தற்போது அப்பலோ மருத்துவமனையில் கூடி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஆராய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.