ஜெயலலிதா மறைவை தொடர்ந்து மற்றுமொரு பிரபல பழம்பெரும் நடிகர் மரணம்!

Wednesday, 07 December 2016 - 8:59

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21
மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், பழம்பெரும் நடிகருமான சோ ராமசாமி காலமானார். 
 
உடல்நலக் குறைவினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 3.30 அளவில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அவர் இறக்கும் போது 82 வயது. 
 
சிறந்த அரசியல் விமர்சகரான அவர், துக்ள் பத்திரிகையிலும், நாடகங்களிலும் அரசியல் விமர்சனங்களை முன்னெடுத்து பெரும் புகழ் பெற்றார். 
 
அத்துடன் அவர் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி சினிமாவிலும் சாதனை படைத்துள்ளார்.
 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜீ.ஆர் ஆகியோருக்கு மிகவும் நெருங்கியவராக இருந்த அவர், ஜெயலலிதா காலமான இரண்டு தினங்களிலேயே காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.