மீன்பிடி துறைமுகங்களில் மணல் அகழ்வதற்கு தடை...

Thursday, 19 January 2017 - 13:38

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88...
நாடாளாவிய ரீதியில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகங்களில் மணல் அகழ்வதை தடுப்பதற்கு வேலைத் திட்டம் ஒன்றை கடற்றொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

துறைமுக அபிவிருத்தி அமைச்சின் ஆதரவுடன், ஒலுவில் துறைமுக அபிவிருத்தியின் ஊடாக இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பல மீன்பிடி துறைமுகங்களில் மணல் அகழ்வதால் மீன்பிடி படகுகள் துறைமுகத்தில் நுழைவதற்கு மற்றும் நங்கூரம் இடுவதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை கருத்தில் கொண்டு குறித்த வேலைத் திட்டம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.