முஸ்லிம் மக்கள் இந் நாட்டில் கௌரவமாக வாழ முடியுமா? - அலிஸாஹிர்

Sunday, 22 January 2017 - 20:26

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F+-+%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D

முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் கௌரவமாக வாழ முடியுமா? என்பது தற்போதைய பிரதான பிரச்சினையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காணி, நீர் விநியோகம், மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், விவசாயம், மீன்பிடி, நிர்வாக அதிகாரிகளின் புறக்கணிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம்கள் தற்போது முகங்கொடுத்து வருகின்றார்கள்.

இவை அனைத்தையும் விட முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்கள் சிதைக்கப்படுகின்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே முஸ்லிம் தலைவர்கள் தற்பெருமையடித்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொண்டு சமூகம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளையிட்டு ஒற்றுமைப்பட வேண்டும் எனவும் அலிஸாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.