உதம்மிட்ட சமரவின் கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது..

Monday, 23 January 2017 - 7:25

%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
வெயங்கொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஜனாக சமன் சமரதிவாகர என்றழைக்கப்படும் உதம்மிட்ட சமர என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மேலும் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த சி.சி.டி.வி கெமராவை பயன்படுத்தி குற்றித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபர் பயணித்த மோட்டார் வாகனத்தில் இருந்த நபரொருவர் வாகனத்தில் இருந்து இறங்கும் போது துப்பாக்கி ஒன்றை இடுப்பில் வைத்துள்ள விதம் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

இதன்படி விசாரணைகளை மேற்கொண்ட மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர், யக்கல – வீரகுல பிரதேசத்தில் 39 வயதான குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ள நிலையில், மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்றும் 4 ரவைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

ஜனாக சமன் சமரதிவாகர என்ற குறித்த நபர் மேலும் 4 பேருடன் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி மோட்டார் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இதற்காக டீ-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், மோட்டார் வாகனத்தின் முன்னாள் உள்ள ஆசனங்களுக்கு இருப்பக்கமும் உள்ள கண்ணாடிகளில் துப்பாக்கி சூட்டு அடையாளங்கள் இருப்பதன் காரணமாக குறித்த துப்பாக்கிச் சூடு மோட்டார் வாகனத்தின் உள்ளேயே இடம்பெற்றுள்ளதா என காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.