பரபரப்பான இறுதி ஓவரில் இலங்கை அணி வெற்றி பெற்ற விதம் - காணொளி...

Sunday, 19 February 2017 - 19:55

%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
 
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
 
இதற்கமைய முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.
 
பதிலளித்தாடிய இலங்கை அணி இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
 
இலங்கை அணி சார்பில் அசே குணரத்ன 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.