நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் உயர் நீதிமன்றத்தில் மனு

Monday, 20 February 2017 - 13:19

%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81
தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. 

குறித்த வாக்கெடுப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரிய இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த நம்பிக்கை வாக்கெடுப்பினை செல்லுபடியாக்குமாறு தமிழக ஆளுனருக்கு திராவிட முன்னேற்ற கழகத்தினர் நேற்றைய தினம் மனு ஒன்றையும் சமர்ப்பித்திருந்தனர். 

எதிர்க்கட்சிகள் பங்குபற்றாத நம்பிக்கை வாக்கெடுப்பானது ஜனநாயகத்திற்கு முரணான வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுனருக்கு வழங்கப்பட்ட அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.