சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது

Monday, 20 February 2017 - 14:50

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
நாளை நடைபெறவிருந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் காலவரையறை இன்றி பிற்போடப்பட்டுள்ளது.
 
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
 
குறித்த தேர்தலுக்கு நீதிபதிகள் சங்கம் ஆதரவு வழங்காமையே தேர்தல் பிற்போடப்பட்டமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து குறித்த தேர்தலில் தெரிவத்தாட்சி அதிகாரியாக செயற்பட்ட மன்றாடியார் நாயகம், அந்த கடமையை புறக்கணித்துள்ளார்.
 
அண்மையில் ஜனாதிபதியினால் மேல் நீதிமன்ற நீதிபதியாக ராமநாதன் கந்தன் நியமிக்கப்பட்டிருந்ததுடன், அவரது பெயரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பரிந்துரை செய்திருந்தது.
 
இதற்கு நீதிபதிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
 
இதன்காரணமாகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.