இலங்கைக்கு வருடாந்த நிதி உதவியினை வழங்க ஜப்பான் இணக்கம்...

Friday, 24 February 2017 - 19:44

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...
இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையேயான இரு தரப்பு உறவினை பலப்படுத்தும் நோக்கில், ஜப்பானிய அரசாங்கம் வருடாந்தம் நிதி உதவியினை வழங்கி வருகின்றது.
 
இதற்கு அமைய 2016-2017ஆம் நிதி ஆண்டில் 32 கோடியே 70 லட்சம் ரூபா நிதியினை வழங்க ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிதி அபிவிருத்தி திட்டங்களுக்கு அல்லாது பொது தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.
 
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரத்துறைக்கான அமைச்சர் என்ற ரீதியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த நிதி வழங்கப்படுகின்றது.

இதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.