அஞ்சலோ மெத்திவூஸ் நீக்கம்!! இலங்கை அணி தலைவர் யார் தெரியுமா..?

Sunday, 26 February 2017 - 8:29

%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21%21+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE..%3F
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பங்களாதேஸ் அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்திவூஸ் உபாதை காரணமாக இந்த போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படியே டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் தலைவர் பொறுப்பு ரங்கன ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகின்ற அதேவேளை, 15ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான தொடரில் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.