தேர்தல் சட்டத்தில் 52 குறைபாடுகள்

Sunday, 26 February 2017 - 20:06

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+52+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தேர்தல் சட்டத்தில் 52 குறைபாடுகள் காணப்படுவதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.

வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் உள்ளுராட்சிமன்ற தேர்தல் மேலும் தாமதமடையக் கூடும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த பலவந்தமாகவே இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே தேர்தல் சட்டங்கள் அசாதாரணமாக அமைந்துள்ளன.

இந்த நிலையில் தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கு இன்னும் காலம் தேவைப்படும்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் உள்ளுராட்சிமன்ற தேர்தல் இன்னும் தாமதமாகும் என பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.