Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E2%80%93+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81...
Tuesday, 21 March 2017 - 10:15
பத்து வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை – பாட்டனாரின் வெறிச் செயல் அம்பலமானது...
451

Shares
54,202

Views
இந்தியாவில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு பத்து வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காவற்துறை விசாரணையில் சிறுமியின் பாட்டனாரே பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்தியா - கேரள மாநிலத்தில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குண்டரா பகுதியில் 10 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டு ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இதுபற்றி காவற்துறையில் புகார் செய்தனர்.

காவற்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார் என்கிற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோரிடம் காவற்துறை விசாரணை நடத்தியபோது சிறுமியின் பாட்டனார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலும், பாடசாலை விடுமுறை நாட்களிலும் சிறுமியை பாட்டனார் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார் எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாட்டனாரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
182 Views
15,150 Views
5,358 Views
8,487 Views
421 Views
12,907 Views
Top