இலங்கைக்காக உதவி கோரியுள்ள சிறுவர் நிதியம்..

Wednesday, 22 March 2017 - 7:52

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கையில் வறட்சி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான நிவாரணங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் 1 மில்லியன் டொலர்களுக்கான உதவித்தொகை கோரிக்கையை விடுத்துள்ளது.
 
கடந்த 40 வருடங்களில் இலங்கை தற்போது பெரும் வறட்சி பாதிப்பை சந்தித்துள்ளது.
 
இதனால் 1.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 232 சிறார்களும் நேரடி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக இந்த நிதி கோரப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.