பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு

Friday, 24 March 2017 - 8:27

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , அணியின் தலைவராக உபுல் தரங்க செயற்படும் நிலையில் ,உபாதை காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும்  விக்கட் காப்பாளரும் , துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா நீக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் , குசலுக்கு பதிலாக மிலிந்த சிறிவர்தன விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் , அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் அவரின் பெயர் இடம்பெறவில்லை.

அணி விபரம் இதோ...

  1. உபுல் தரங்க (அணித்தலைவர்)
  2. நிரோஷன் திக்வெல்ல
  3.  தனஞ்சய த சில்வா
  4.  குசல் மெந்திஸ்
  5.  அசேல குணரத்ன
  6.  தினேஷ் சந்திமால் (உபத்தலைவர்)
  7. தனுஸ்க குணதிலக
  8. சுரங்க லக்மால்
  9. லஹிரு குமார
  10. விக்கும் சஞ்சய்
  11. திசர பெரேரா
  12. சசித்பதிரன
  13. லக்ஷான் சந்தகென்