ரஷ்யா உலங்கு வானூர்திகளை பழுதுபார்க்கும் நிலையம் இலங்கையில்..

Saturday, 25 March 2017 - 10:11

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட உலங்கு வானூர்திகளை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளது.

மலேசியாவில் இடம்பெறும் கண்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட ரஸ்யாவின் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு சேவையின் உதவி தலைவர் மிக்ஹெய்ல் பெட்டுவ்கொவ் இதனை தெரிவித்துள்ளதாக மலேசிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

உலங்கு வானூர்திகளுக்கு உதிரிபாகங்களை வழங்குவது உட்பட்ட பணிகளை இந்த நிலையம் மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது எம் ஐ 8-17ரக உலங்குவானூர்திகள், 12 தாக்குதல் உலங்கு வானூர்திகள் 6, எம்.எம்.பி சண்டை உலங்கு வானூர்திகள் 2, மற்றும் சுமார் 50 துருப்புக்காவிகள் என்பன இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.