இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்...

Saturday, 25 March 2017 - 13:08

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D...
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஊடாக முழுமையான நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரமர் நவாஷ் ஷெரிப் இதனைத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இலங்கை, பாகிஸ்தான வர்த்தக முதலீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் இப்டிகார் அஸிஸை சந்தித்தப்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் மக்களின் நன்மையை கருதி இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டின் குறிக்கோளிற்காக செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.