உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்..

Saturday, 25 March 2017 - 19:26

%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவால் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திபின் போது தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச சுமார் 80 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக உணவு இன்றி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்.

தனது உயிரை பற்றியும் கவலை இன்றி, அவர் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்.

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் பிரிவினை வாதிகளுக்கு நாட்டை பிளவுப்படுத்துவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றது.

இந்தநிலையில், அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த மோசமான அரசியலுக்கு எதிராக விமல் வீரவன்ச இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக ஜெயந்த சமரவீர தெரிவித்தார்.