மறுபடியுமா? : அதிர்ச்சியளிக்கும் செம்சுங்கின் முடிவு....

Tuesday, 28 March 2017 - 17:59

%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F+%3A+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81....+
செம்சுங் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஸ்மார்ட்போனான கேலக்ஸி நோட் 7, பேட்டரி கோளாறு காரணமாக வெடித்து சிதறியது.

இதனால் வெளியிடப்பட்ட இரண்டே மாதங்களில் நோட் 7 சர்வதேச விற்பனை நிறுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களும் திரும்ப பெறப்பட்டன. 
 
இந்நிலையில் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை புதுப்பித்து மீண்டும் விற்பனை செய்ய இருப்பதாக செம்சுங் அறிவித்துள்ளது.

செம்சுங் நிறுவனத்தின் நோட் 7 ஸ்மார்ட்போனிற்கான பேட்டரியை செம்சுங் எஸ்டிஐ கோ லிமிட்டெட் மற்றும் அம்பெரெக்ஸ் டெக்னாலஜி லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்கின.  
 
சாம்சங் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளில் நோட் 7 பேட்டரியை தவிர இதர பாகங்களில் எவ்வித கோளாறும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட நோட் 7 விற்பனை மூலம் சாம்சங் சந்தித்த இழப்புகளை ஈடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.