ஆசிரிய உதவியாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

Wednesday, 29 March 2017 - 19:41

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு உள்வாங்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
 
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் 3 ஆம் திகதி குறித்த நேர்முக தேர்வு மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெறவுள்ளது.
 
ஆவணங்களை உரிய விதத்தில் சமர்ப்பிக்க முடியாதவர்கள் இந்த ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு உள்வாங்கப்படமாட்டார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடிதம் கிடைக்கபெற்ற ஆசிரியர் உதவியாளர்கள், பாடசாலை அதிபர், வலய கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோருடைய விடுவிப்பு கடிதங்கள் மற்றும் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள் உரிய வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும்.
 
உரிய வகையில் ஆவணங்களை சமர்பிக்க முடியாதர்கள் இந்த ஆசிரியர் கலாசாலைகளுக்குள் உள்வாங்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான கடிதம் அனுப்பப்படாதவர்களுக்கு, கல்வி அமைச்சின் மூலமாக தொலைக்கல்வி பயிற்சிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
 
இதற்கான பயிற்சிகளை தங்களுடைய பிரதேசங்களிலேயே பெற்று கொள்ள முடியும் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த தொலைக்கல்வி திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளது.
 
எனவே இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 31ஆம் திகதி கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.