Hirunews Logo
%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
Friday, 21 April 2017 - 17:27
ஐந்து வருடங்களாக மரங்கள், பாறைகள், தூண்களில் கட்டிவைக்கப்பட்ட பிள்ளைகள்!!
843

Shares
101,211

Views
5 வருடங்களாக மரங்கள் , பாறைகள் மற்றும் தூண்களில் கட்டிவைக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகள் கதிர்காமம் நாகாஹவீதிய கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதி தேரர் ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

காவற்துறை அதிகாரிகளுடன், அங்கு சென்ற தேரர், அதன்போது தூண்களில் கட்டப்பட்டிருந்த அந்த பிள்ளைகள் இருவரையும் மீட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ளவர்கள் 7 வயதான ஆண் பிள்ளையொன்றும், 17 வயதான பெண் பிள்ளையொருவரும் என தெரியவந்துள்ளது.

அவர்களால் பேசவும் முடியாது என பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.

குறித்த பிள்ளைகளின் தாய் மேலும் ஒரு விஷேட தேவையுடைய பிள்ளையை கதிர்காம ஆலயத்தில் யாசகம் பெற அமர்த்தியுள்ளதாக இதன்போது தெரியவந்துள்ளது.

பல காலங்களாக இவ்வாறு அந்த பிள்ளைகள் கட்டிவைக்கப்பட்டிருந்தாகவும், அவர்களின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் வேறு ஒரு நபருடன் வாழ்ந்து வருவதுடன், அந்த பிள்ளைகளை கவனிக்குமாறு காவற்துறை பல முறை தாயுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த பெண் மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளைகளை குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க முயன்ற போதும், பிள்ளைகள் விஷேட தேவையுடையவர்கள் என்பதால் அதனை மேற்கொள்ள முடியாமல் போனதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கதிர்காமம் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,157 Views
12,787 Views
5,027 Views
6,188 Views
65 Views
9,244 Views
Top