Friday, 21 April 2017 - 18:07
கொழும்பில் பல பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்..
இன்று மாலை 6.00 மணி முதல் நாளை மாலை 6.00 மணிவரை கொழும்பில் பல பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு - கோட்டை, பொரளை, மருதானை, கொள்ளுபிட்டி, பம்பலபிட்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.