கடற்றொழில் துறை அபிவிருத்திக்கு வியட்நாம் ஒத்துழைப்பு..

Saturday, 22 April 2017 - 8:10

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
இலங்கையின் கடற்றொழில் துறை அபிவிருத்திக்கு வியட்நாமின் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 
ஆசிய பிராந்தியத்தில் நீரியியல் வளத்துறையில் உயர்ந்தபட்ச முன்னேற்றத்தை கொண்ட நாடாக வியட்நாம் கருதப்படுகிறது.
 
நன்னீர் மீன்பிடித்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமும், மீன் பதனிடல் ஊடாகவும் வியட்நாம் கூடுதலான தேசிய வருமானத்தை பெற்றுக்கொள்கின்றது.
 
இந்த நிலையில், பென் ஜீசஸ் என்ற மீனினம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 
ஒரு கிலோ மூவாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இந்த மீனிற்கு ஐரோப்பிய சந்தையில் அதிக கேள்வி நிலவுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.