நேற்றைய போட்டியில் நடந்த விடயம்.. ; இலங்கை அணி வீரர்கள் இணைக்கப்படவில்லை..

Sunday, 23 April 2017 - 8:16

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..+%3B+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..
10வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன.

இதன்படி, 24வது போட்டியாக இடம்பெற்ற  Rising Pune Supergiant ,  மற்றும் Sunrisers Hyderabad அணிகளுக்கு இடையிலான போட்டியில் Rising Pune Supergiant அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

25வது போட்டியில், டெல்லி டெயர் டெவல்ஸ் அணியை மும்பை இன்டியர்ன்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.

இந்நிலையில் இலங்கை அணி வீரர்களான என்ஜலோ மெத்தீவ்ஸ் மற்றும் லசித் மாலிங்க நேற்றைய போட்டியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எவ்வாறாயினும் லசித் மாலிங்க கடந்த போட்டியில் எதிர் அணிக்கு அதிக ஓட்டங்களை கொடுத்தமையினால் அவரை நேற்றைய போட்டியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதனிடையே, இன்று குஜராத் லைன்ஸ் மற்றும் கி ங்ஸ் இளவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியும், கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கும் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியும் மோதும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.