முன்னாள் மனைவிக்கு வழங்கிய அதிக பணம் தொடர்பில் வெளிப்படுத்திய டில்ஷான்..

Tuesday, 25 April 2017 - 16:35

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D..
தான் நீதிமன்றத்தில் சரணடைய காரணம், தனது சட்டத்தரணியால் வழக்கு தினம் சரியாக பதிவு செய்யப்படாததால் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் திலக்கரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

டில்ஷான் இன்று சட்டத்தரணி ஊடாக மோசன் மனு ஒன்றை முன்னிலைப்படுத்திய நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கொன்றிற்கு தில்ஷான் முன்னிலையாகாததால் தில்ஷானை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

எனினும் வழக்கிற்கு முன்னிலையாமைக்கான காரணம் சட்டத்தரணியால் ஏற்பட்ட சிறுவதறால் என நீதிமன்றத்தை மதித்து சட்டத்தரணி ஊடாக தெளிவுப்படுத்தியதுடன், பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்யுமாறும், மீண்டும் அடுத்த வழக்கு தினத்தின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாகவும் எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது டில்ஷான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த டில்ஷான், தனது முதலாவது திருமண உறவில் இருந்து சட்டரீதியாக பிரிந்ததுடன், முன்னாள் மனைவிக்கு 300 லட்சம் ரூபாய் பணம் வழங்கியதாகவும், மேலும் குழந்தைகளுக்காக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த பெண் கோருவதற்கு அமைய தனது கடின உழைப்பால் பெற்று கொண்ட பணத்தை வீணாக செலவு செய்ய முடியாது எனவும் டில்ஷான் தெரிவித்துள்ளார்.