காவற்துறையினர் எனக் கூறி இருவர் கடத்தப்பட்டனரா! – கம்பளையில் பதற்றம்...

Thursday, 27 April 2017 - 8:10

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%21+%E2%80%93+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D...
தாம் காவற்துறை அதிகாரிகள் எனக் கூறி இனந்தெரியாத சிலர் கம்பளை பிரதேசத்தில் இருவரை கடத்திச் சென்றுள்ளதாக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டுள்ள உறவினர்களால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளவர்கள், கம்பளை - புபுரஸ்ஸ - ரஜதலாவ மற்றும் பன்விலதென்ன ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இருவர் என தெரியவந்துள்ளது.

ரஜதலாவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான நபர் சுய தொழில் ஒன்றை மேற்கொண்டுவந்துள்ள நிலையில், ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் தனது வீட்டுக்கு முன்னாலே அவர் கொண்டு செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பேருந்து நிலையத்திற்கு அருகில் 27 வயதான மற்றைய நபர் கடத்தப்பட்டுள்ளதாக கலஹா காவற்துறையில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனியார் பேருந்தொன்றின் நடத்துனர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு கம்பளை காவற்துறை பொறுப்பதிகாரியிடம் வினவிய போது, கொழும்பு காவற்துறை தலைமையகத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் ஊடாக விசாரணைகளுக்காக அவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.