மெசடோனியா நாடாளுமன்றத்தில் உக்கிர மோதல்: பலர் காயம் - காணொளி

Friday, 28 April 2017 - 8:48

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
மெசடோனியாவின் நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
 
இதில் சுமார் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
 
அல்பேனியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
 
முன்னாள் பிரதமர் நிக்கோலா குருவ்ஸ்கிக்கு ஆதரவானவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவர்கள் புதிதாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.