சந்திரனில் சர்வதேச கிராமம் உருவாகும் வாய்ப்பு!

Friday, 28 April 2017 - 14:12

+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21

இது குறித்து சீனாவுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் விண்வெளியில் குறிப்பாக சந்திரனில் தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

சேஞ்ச்-5 என்ற விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி அங்கு மண், பாறை போன்றவற்றை எடுத்து வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

2018-ம் ஆண்டில் சந்திரனின் இருண்ட பக்கத்தில் விண்கலத்தை இறக்க உள்ளது. 2020-ம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

சந்திரனில் கிராமம் அமைக்கும் முயற்சியில் சீனாவும் ஈடுபட்டால் அங்கு சர்வதேச கிராமம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என ஐரோப்பிய விண்வெளி கழகம் கருதுகிறது.

இதுகுறித்து சீனாவின் பெகிஸ் பல்கலைக்கழக பூமி மற்றும் விண்வெளி அறிவியல் பள்ளியின் தலைவர் பேராசிரியர் ஜியாயோ வெய்லின் கூறும் போது, “எதிர்காலத்தில் சந்திரனில் சர்வதேச நகரம் உருவாகும். அது ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் என்றும் கூறினார்.