ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் பின் மேலுமொரு நோக்கம்...

Friday, 28 April 2017 - 19:07

%E0%AE%9C%E0%AF%80.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெளிவிவகாரத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிவிவகாரத்துறை பிரதி  அமைச்சர் ஷர்ஷ டீ சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
 
ஏற்றுமதியற்ற பொருளாதாரத்தின் மூலம் இலங்கை அபிவிருத்தியை எட்ட முடியாது.
 
இந்த ஏற்றுமதி பொருளாதார அபிவிருத்திக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை உறுதுணையாக இருந்தது.
 
கடந்த 2010ஆம் ஆண்டு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் ரத்து செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், தற்போது குறித்த வரிச்சலுகையினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இறுதி நிலையை எட்டியுள்ளது.
 
இந்த வரிச்சலுகையானது நிரந்தரமாக இலங்கைக்கு கிடைக்காது.
 
அதிகபட்சம் 3 அல்லது 4 வருடங்களுக்கே வழங்கப்படும்.
 
இதனை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி இலங்கைக்கும், ஐரோப்பிய ஒன்றித்திற்கும் இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது வர்த்தக ரீதியாக இலங்கைக்கு வெற்றியை அளிக்கும் என பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.