டொனால்ட் ட்ரம்ப்பின் முதலாவது உத்தியோகபூர்வ வௌிநாட்டு விஜயம்

Monday, 22 May 2017 - 19:27

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் தமது முதலாவது உத்தியோகபூர்வ வௌிநாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
 
சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட அவர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய நாடுகளுக்கான பயணத்தை ஆராம்பித்துள்ளார்.
 
சவுதி அரேபியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், அராபிய மற்றும் முஸ்லீம் தலைவர்கள் பங்குகொண்ட உச்சிமாநாடொன்றில் உரையாற்றினார்.
 
இரண்டு நாள் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்களில் தங்கும் அமெரிக்க ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முன்னதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய தலைவர்கள் தமக்கிடையே உள்ள பிரச்சனைகளை நேரடியாக பேசி தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தாம் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
 
இஸ்ரேல் தொடர்பாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை விட, டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலிய குடியமர்வு குறித்து மென்போக்கை கடைப்பிடிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இஸ்ரேல் கடந்த 1967ஆம் ஆண்டு மேற்கு கரையோரம் மற்றும் கிழக்கு ஜெரூசலத்தின் பகுதிகளை ஆக்கிரமித்ததன் பின்னர், இன்று வரை 140 குடியிருப்பு தொகுதிகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் குடியேறியுள்ளனர்.
 
இஸ்ரேலின் இந்த நடவடிக்கையானது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்ட போதிலும், அதனை இஸ்ரேல் ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.