வடகொரியாவின் ஏவுகணை சோதனை வெற்றி - தென்கொரியா

Monday, 22 May 2017 - 19:31

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+-+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
வடகொரியாவினால் நேற்று மீண்டும் பரிசோதிக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றியளித்துள்ளதாக வடகொரிய அரச செய்தி ஸ்தாபனம் KCNA தெரிவித்துள்ளது.
 
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை, இராணுவ நடவடிக்கைகளுக்காக வட கொரிய இராணுவ தளபாடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், வடகொரியாவினால் கடந்த மூன்று ஏவுகணை பரிசோதனைகளை விட நேற்று பரிசோகிக்கப்பட்ட ஏவுகணை குறுந்தூர ஏவுகணை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், தென்கொரியா மேலும் ஏவுகணை பரிசோதனைகளில் ஈடுபடக்கூடாது என கடந்த திங்கட்கிழமை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை வலியுறுத்தி இருந்தது.
 
இதனை வடகொரியா கவனத்திற்கு எடுக்காத நிலையில், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை நாளை மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.