ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை..

Wednesday, 24 May 2017 - 15:48

%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88..
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 30 ஆம் திகதி மருத்துவ அறிக்கையுடன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தல் விடுத்துள்ளது.
 
ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னொலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு விசாரணையின் போது அவதூறு ஏற்படும் வகையில் செயற்பட்டமைக்கு எதிராகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
குறித்த வழக்கு விசாரணைக்கான தினத்தை நிர்ணயிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ரோஹினி வல்கம மற்றும் எஸ் துரைராஜா முன்னிலையில் இது தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
 
எனினும், இன்றைய தினம் பிரதிவாதியான கலகொட அத்தேஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
 
தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என கலகொடஅத்தே ஞானசார தேரரின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.
 
இதற்கமைய விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் மருத்துவ அறிக்கையுடன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.