களனி கங்கையின் தாழ்நிலப்பகுதி மக்களுக்கான விசேட அறிவித்தல் -, அனர்த்த நிலமை தொடர்பில் அறிவிக்க 3 இலக்கங்கள்

Friday, 26 May 2017 - 11:22

%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-%2C++%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மலையத்தில் பெய்து வரும் அதிகமழை காரணமாக நோர்டன் பிரிட்ஜ் , விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளுக்கு மேலாக நீர் வழிந்தோடுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் மற்றும் மஸ்கெலியா - கெனியொன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் இன்று காலை திறக்கப்பட்டன.

அதேபோல் , களனி கங்கையின் இரு பகுதிகளிலும் வசிக்கும் மற்றும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்கள் வௌ்ளப்பெருக்கு அவதானம் காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னண்கர இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி , சீதாவக , கொலன்னாவை , ஹோமாகம மற்றும் கடுவலை பிரதேசங்களுக்கு வெள்ளப்பெருக்கு அவதானம் ஏற்பட்டுள்ள நிலையில் , குறித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்பிரதேசங்களில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிலைமைகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் அறிந்து கொள்வதற்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் பெறும் தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது.

இதன்படி பின்வரும் இலக்கங்களுடன் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும்.

0112136226

0112136136

0773957900