அவஸ்திரேலியா அணிக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்தது இலங்கை அணி...

Friday, 26 May 2017 - 19:51

%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF...
செம்பியன் கிண்ணத்திற்கான பயிற்சி போட்டி ஒன்றில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தற்போது மோதுகின்றன.

லண்டன் கெனிங்றன் விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதனையடுத்து , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 318 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக அதிகபட்ச ஓட்டங்களாக அணித்தலைவர் ஏன்ஞலோ மெத்தீவ்ஸ் 95 ஓட்டங்களையும் அசேல குணரத்ன ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா அணி சற்று முன்னர் வரை 7 ஓவர்கள் முடிவில் விக்கட் இழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.