2 வது போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி..

Sunday, 28 May 2017 - 9:56

2+%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF++%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அகிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பென் ஸ்ரோக்ஸ் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலளித்த தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 328 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா சார்பில் குவிண்டன் டி கொக் 98 ஓட்டங்களை பெற்றார்.

இதன்படி, மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி, நாளைய தினம் இடம்பெறவுள்ளது.